மனிதனின் வெற்றி அவனுடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில்தான் இருக்கிறது. அவனின் வாழ்க்கையில் வளர்ச்சி இல்லை என்றால், எப்படி தேங்கிய நீர் சாக்கடையாகி விடுகின்றதோ, அதே நிலைதான் மனிதனும் அடைகிறான். மனிதனுக்கு மாற்றம் தேவை. மாற்றத்தில் தான் முன்னேற்றம் இருக்கிறது. ஆனால் இம்மாற்றம் நேர்மறையானதாக, ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். இம்மாற்றங்களை மனிதவள மேம்பாட்டின் மூலம் திட்டமிட்டு வளர்த்துக் கொள்ளலாம். உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்நூல் மனிதவளம் என்றால் என்ன? மனிதவளத்தை எப்படி மேம்படுத்த முடியும்? அதனுடைய அவசியமும் முக்கியத்துவமும் என்ன? என்பதைப் பற்றிச் சுருக்கமாக, அழகாக, நேர்த்தியாகப் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் இந்நூல் சிறியதாக இருந்தாலும் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.
இந்நூல் மனிதனைப் புடம் போட்ட தங்கமாகச் சிந்தனையைச் செதுக்கி, ஆழமான கருத்துகளை விவாதிக்கிறது. இதன் மூலம் மனித சமூகத்திற்கு மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க நினைக்கிறது.
Be the first to rate this book.