நண்பர் த. ஸ்டாலின் குணசேகரன் செறிவான செய்திகளை எந்தவிதமான கதைகளும் இல்லாமல் பருவமழை செய்வதுபோல உரையாகப் பொழிந்திருக்கிறார். மகத்தான மனிதர்களே அவருடைய பேசுபொருள். அவர்களுடைய தெரியாத பக்கமே அவருடைய வீச்சின் மையம். அவ்வகையில் இத்தொகுப்பில் உள்ள அத்தனை உரைகளும் படித்து மகிழத்தக்கவை. நினைவில் வைத்துப் போற்றத்தக்கவை. ஒரே மூச்சில் படித்தாலும் பலமுறை படித்து உள்வாங்க வேண்டியவை.
Be the first to rate this book.