“மனிதன் நினைப்பது ஒன்று” என்ற இந்த படைப்பு, மனிதகுலத்தின் மதிப்பை உயர்த்தி பிடிக்கிறது. இவ்வுலகில் போர்களால் அழிக்கப்படுகிற காட்டுமிராண்டித்தனத்தால் மங்கிபோகிற மனிதநேயத்தின் இழப்பு, அதனால் இயர்க்கையின் தண்டணையான “கொரோனா” பாதிப்பு இவையனைதையும் உள்ளடக்கிய தார்மிகச் சிந்தனை கொண்டது. இந்த நாவலானது, ஒரு ஜமீன் குடும்பம் அதன் கடந்த காலா புகழின் நினைவுகலியே வாழ்ந்துக் கொண்டுயிருக்கும்போது, படிப்படியாக அவர்களுக்குள் நடக்கும் மனமாற்றதை, அந்த காலம் முதல் தற்காலம் வரை இணைத்து நேர்தியாக வரிசைப்படுத்திக் காட்டுகிறது. மேலும் அனைவரையும் நேசிக்கவும், அக்கறை கொள்ளவும், செல்வந்தரான மருதுப்பண்டியர் என்கிற “வயதான ஜமீன்தார்”, அவரது மகன் “அன்புச் செழியன்” மற்றும் மருமகள் “தமிழ்செல்வி” ஆகியோரின் வாழ்க்கை, கிருபை அம்மா, அஞ்சலை, கன்னியப்பன் மற்றும் முனுசாமி போன்ற சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள், ஜமீன் கதாபாத்திரங்களுக்கு இணையாகவும் தெளிவாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தின் கீழ்நிலை மக்கள் சரியான நேரத்தில் தங்களின் எதார்த்த செயல்களில் ஈடுபடுத்தியது. பிரிவினை என்ற தடை சூழ்நிலையை தகர்த்து, சமத்துவத்தை நிலைநாட்டுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட சாதி, மதம், பொருளாதாரம் ஆகியவற்றின் பெயரால், பரவிகிடக்கும் வேறுபாடுகளுக்கும் மேலாக மனிதநேயத்தின் முன்னுரிமையை வலியுறுத்துகிறது, அனைத்து காலத்திற்கும் சுழ்நிலைக்கும் பொருத்தமானது.
Be the first to rate this book.