ஆரோக்கியம், நோய் என்ற வாழ்க்கையின் இன்றியமையாத மிகவும் முக்கியமான இரண்டு அங்கங்களின் பரிணாமம் ஒரு உடலின் கதையாக இந்நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மானுடவியல், உயிரியல், மரபு வழிப் பண்பியல் என்று பல்வேறு தளங்களின் வழியே மனித உடல் தொடர்பான விஷயங்கள் அலசப்பட்டிருக்கின்றன.
நவீனம், நாகரிகம் என்ற பெயரில் நாம் கடைபிடிக்கும் உணவுப் பழக்கங்களும் இதர செயல்பாடுகளும் நமது பரிணாமப் பாதையிலிருந்து முரண்பட்டிருப்பது சர்க்கரை, இரத்த அழுத்தம், கிட்டப் பார்வை போன்ற பல நீண்ட கால நோய்களை ஏற்படுத்தி நமது துயரத்தையும் செலவினத்தையும் அதிகரிப்பதோடு, நாம் அவற்றுக்கு அளிக்கும் சிகிச்சை ஒரு விஷ வளையத்தை ஏற்படுத்துவதையும் சுட்டிக்காட்டுகிறார் பேரா. லிபர்மேன். இந்நோய்களைத் தவிர்ப்பதற்கான எளிய தீர்வுகளையும் இயற்கையோடு முரண்படாமல் வாழும் வழிகளையும் முன்வைத்திருக்கிறார். அனைத்துப் பிரிவு மக்களும் படித்துப் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாகச் சொல்லியிருப்பது இந்நூலின் சிறப்பு.
Be the first to rate this book.