மனித இனங்கள் பற்றிய பிரச்சனை மானிட இயலின் மிக முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று. மானிட இயல் என்பது வயது, பால், பூகோளம் ஆகிய வகைகளிலும் பிற வகைகளிலும் மனித இயல்பின் வரலாற்றை ஆராயும் விஞ்ஞானம்.இனங்களோ, எதார்த்தத்தில், தற்கால மனிதனது உடல் மாதிரியின் வரலாற்றுப் போக்கில் உருவான பூகோள வகைகளே. இந்த நூல் சோவியத் மானிட இயலின் ஆராய்ச்சிமுறை மெய் விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிநாட்டு மானிட இயல் விவரங்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. மனித இனங்கள் உருவானதை மனிதனது தோற்றத்துடன் உரிய முறையில் இணைத்து வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.
மனிதர்களின் மிக நெருக்கமான மூதாதைகள் உள்ளிட்ட புதைபடிவ மனிதக் குரங்குகள், பித்திக்காந்தி ரோப்பஸ், சீனாந்திரோப்பஸ் போன்ற மிகத்தொன்மைக்கால மனித விலங்குகள். பண்டை மனிதர்களான நியாண்டெர்தல்களை. அவர்களுடைய சந்ததிகள் -தற்கால வகை மனிதர்களின் புதைபடிவங்கள் -ஆகியவை பற்றிய மிகப் புதிய மெய்விவரங்கள் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன
Be the first to rate this book.