செந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் காரணமாக பணி விலகியவர். மரபு இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம், உலக இலக்கியம், இந்திய இலக்கியம் என விரிவாகக் கற்றவர் கண்ணதாசன் காதல்.காஞ்ச கள்ளிமரம். வாழ்வின் தீராப் புள்ளிகள் என்ற நூல்களின் ஆசிரியர் இந்நூலில் திரைப்படத்தின் ஆழ அகலங்களையும் நுட்பங்களையும் அது கைக்கொள்ள வேண்டிய தூரத்தையும் மணிரத்னம் படைப்புகள் மூலம் எழுதிக் காட்டுகிறார், நவீன இந்தியாவின் ஒட்டு மொத்த போக்குகளையும் காட்டி நிற்பவை மணிரத்னம் படைப்புகள் என்றும். மணிரத்னம் திரைப்படங்கள், திரைநாவல் என்றும் குறிப்பிடுகிறார். இதைக் கண்டு நிற்பதின் மூலம் ஒட்டு மொத்தத் திரைப்படங்களின் இடத்தையும் அறிந்து விடலாம். அவ்வகையில் திரைப்படம் குறித்த மிக முக்கியமானது நூல் இது.
Be the first to rate this book.