என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. தமிழில் எழுதப்பட்ட முதல் பவுத்தக் காப்பியம், மணிமேகலை. அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டவேண்டும் என்னும் உயரிய மானுட தத்துவத்தை முன்வைக்கும் தனிச்சிறப்பான படைப்பு இது.
கோவலனின் மறைவுக்குப் பிறகு மாதவி தன் மகள் மணிமேகலையை ஒரு புத்தத் துறவியாக வளர்க்கிறாள். மணிபல்லவத் தீவுக்குச் செல்லும் மணிமேகலை, தீராத ஞான வேட்கையுடன் சமய, தத்துவ மற்றும் வாழ்வியல் விசாரணைகளில் ஈடுபடுகிறாள். வயிற்றுப் பசியை தீர்க்க அட்சயப் பாத்திரத்தையும் அறிவுப் பசியை நீக்க ஞானத்தையும் கைகொள்கிறாள். சாகாவரம் பெற்ற மணிமேகலையின் அழகிய நாவல் வடிவம்.
Be the first to rate this book.