ஒரு பெண் அவளுடைய பிறப்பிலிருந்து இறப்புவரை ஆண்மகனை நம்பியே வாழ வேண்டும் என்கிறது இந்த சமுதாயம். கற்பழிப்பு ஒரு குற்றமாகப் பார்க்கப்படாமல் ஒரு வேடிக்கை ஆகிவிட்டது. பாலியல் வன்முறைக்கு அந்தப் பெண் அணிந்திருக்கும் அந்த ஆடை தான் காரணம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் சில நல்லவர்கள், கல்விக்காகப் போராடும் பெண்கள் என்ற காலம் மாறி, கற்பைப் பாதுகாக்கப் போராடும் பெண்கள் வாழும் காலமாகிவிட்டது.
மனிதன் நாகரிகம் அடைந்துகொண்டே வருகின்ற காலத்தின் நெடுகிலும் தேவையற்ற அறியாமையையும், அடிமைத்தனத்தையும் சுமந்துகொண்டே வருகின்றான். அவ்வாறான மனிதர்களை இடைமறித்து நிறுத்தி சில கேள்விகளாலேயே பதில் உரைத்திருக்கிறது ‘மனிதி’, காலத்தின் தேவை இந்நூல்.
Be the first to rate this book.