மங்கையர் கூடம் என்ற இந்த நூல் பெர்ல். எஸ். பக்கின் Pavilion of Women: A Novel of Life in the Women's Quarters என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். 1940களில் சீனாவில் நடைமுறையிலிருந்த ஒரு உயர் குடும்பத்தின் வாழ்வைப் பிரதிபலிக்கும் நாவல் இது. நாற்பது வயது எட்டிய மேடம் ஊ என்ற பெண்மணியின் குடும்பத்தைச் சுற்றி நிகழும் கதை. மேடம் ஊ தனது நாற்பதாவது பிறந்த நாளன்று எடுக்கும் முக்கிய முடிவான தனது கணவருக்கு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வது என்பது பல விளைவுகளை ஏற்படுத்துகின்றது. உயர் குடும்பத்து பெண்களின் வாழ்க்கை, அவர்களது நம்பிக்கைகள், சீன வாழ்வின் கட்டுப்பாடுகள், போன்றவற்றை மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.
Be the first to rate this book.