இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று. எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல் இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இந்நாள் வரை தமிழில் எழுதப்பட்டதில்லை. இதுவே முதன்முறை. அந்த வகையில் இதைத் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்பேன். இந்த நாவலை எழுதுவதற்காக மூன்று ஆண்டுகள் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு, ரஷ்ய வரலாறு, டால்ஸ்டாயின் டயரிக் குறிப்புகள், சோபியாவின் டயரிக் குறிப்புகள், டால்ஸ்டாய் குடும்பத்தினரின் நினைவலைகள், டால்ஸ்டாய் பற்றி எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், அவரது சமகால எழுத்தாளரின் படைப்புகள், பண்ணை அடிமைகள் பற்றிய அறிக்கைகள் எனத் தேடித் தேடிப் படித்தேன்.
5 one of best book
deeban 03-05-2024 05:47 pm
5 எனது மகனின் நினைவாக…!
மண்டியிடுங்கள் தந்தையே எழுத்தாளர்: எஸ்.ராமகிருஷ்ணன் வகை: நாவல் பதிப்பகம்: தேசாந்திரி பதிப்பகம் விலை: 350 பக்கங்கள்: 248 ஒரு தானியம் தன்னை அழித்துக் கொள்வதன் வழியேதான் புத்துயிர்ப்பு பெறுகிறது.மனிதர்களுக்கு அது சாத்தியமில்லை.மனிதன் இறப்போடு அவன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.அவனால் மறுஉயிர்ப்பு கொள்ள இயலாது. - எஸ்.ராமகிருஷ்ணன் விடுமுறை காலத்து காதல் கதை நாவலுக்கு பிறகு நான் வாசிக்கும் நாவல் இது.ஜந்துவருடத்துக்கு பிறகு எங்களுக்கு போன வருடம் நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.எனது மகனின் நினைவாக வாங்கிய புத்தகம் இது.வெளியீட்டின் முதல் நாளே எஸ்.ராவின் கையால் எனது மகன் பெயர் “லெனின் வான்கா “ எழுதி வாங்கிகொண்டேன் இந்த புத்தகம்.எனக்கு மகன்பிறந்த போது எஸ்.ரா மகன் தந்தை உறவின் கதையை எழுதுகிறார்.எனக்காகவே எழுதியிருக்கிறார் தோழர் எஸ்.ரா. ரஸ்ய கருப்பு வெள்ளை திரைப்படம் பார்த்த அனுபவத்தை தந்தது இந்த புத்தகம்.எஸ்.ராவின் சிறப்பே ஒரு வரியாயிருந்தலும் அதை காட்சியாக எழுதுவது.அதுவும் ஒர் சிறந்த Cameraman காட்சி அமைப்பில் இருக்கும்.ஒளி,இசையேன பின்னனி இசையே வாசிக்கும் அனைவரையும் ரஸ்யாவுக்கே அழைத்து சென்றுவிடுவார். திமோஃபியின் கதபாத்திரம் உயிர்ரோடு உழாவும் இந்த கதையில்.அவனின் சிரிப்பு அழுகை கோவம் நடை பாவனையென நம் கண்முன்ணே அளைந்து திரிவான்.தந்தை ஏன் என்னை மகன் என்று ஏற்க்க மறுக்கிறார்.ஏன் தன் அம்மாவை கைவிட்டார்.மனைவியையும் தன் குழந்தையும் எப்படி பண்ணை அடிமைகளாக வைத்து வேலை வாங்க முடிகிறது.அம்மா ஏன் தனது உரிமையை விட்டுகொடுத்து தினம் தினம் அவரை நினைத்து மனதளவில் இப்படி கஷ்டப்படுகிறார்.சமுகத்தில் இவ்வளவுபெரிய இடத்தில் இருக்கும் ஒர் எழுத்தாளன் எப்படி தனக்கொரு மகன் மனைவி இருப்பதை மறைத்து இந்த பெருமையில் வாழமுடிகிறது.கேள்வி கடைசிவரை விடை தெரியமால் போவது. டால்ஸ்டாயின் மனைவியாக வரும் சோபியாவின் கோவம்கலந்த காதல் நாவல் முழுக்க நம்மை சிரிப்பையும் கோவத்தையும் வரவைக்கும்.டால்ஸ்டாயின் எழுத்தில் பெபியபங்கு சோபியாவிற்க்கு இருந்திருக்கிறது. சோபியாவின் கோவத்தை சரியாக எதிர்கொண்டு டால்ஸ்டாய் வாழ்க்கை முழுக்க வென்றிருக்கிறார். அக்ஸின்யாவின் பனிப்போல் தூய்மையானது அவளது காதல் எங்கும் நமக்கு டால்ஸ்டாய் மீது கோவமே வராதமாதிறியிருக்கும்,சிகப்பு துணி அவளை ஞாபகப்படுத்தும்.திமோஃபி அவளை புரிந்துகொள்ளவே முடியாது அவளின் தியாகம் அர்த்தம் அற்றது என்றுநினைத்தான். டால்ஸ்டாயால்பட்ட வேதனை போத்தென்று இவனும்வேதனைஅடையசெய்வான்.டால்ஸ்டாயை குதிரை லாடாத்தால்காயப்படுத்தியது. அவரின் உருவபொம்மையை எறிப்பது,அவரை தப்புதப்பாக பேசுவது கூட முட்டாள் டிம்ட்ரியை சேர்த்துக்கொண்டு மொரட்டுதனம் பண்ணுவது ஊரை விட்டு ஒடுவதுயேன சொல்லிக்கொண்டே போகலாம் பாவம் அக்ஸின்யா கனவணாலும் மகிழ்ச்சியில்லை பெற்ற பிள்ளையாலும் மகிழ்ச்சியில்லமால் தவிக்கிறாள் ஆனால் அவள் யார் மீதும் புகார் சொன்னதே இல்லை.மீன் போல அவளின் வாழ்வு நீரில் தோன்றி நீரிலே முடிந்துவிடுகிறது. * இயற்க்கை கடந்தகாலத்தை நினைவு வைத்துக் கொள்வதில்லை. * காலம்தான் மனிதர்களின் பிரச்சனை.அவர்களால் நிகழ்காலத்தில் மட்டும் வாழமுடியாது. * ரகசியங்கள் இல்லாத மனிதர்கள் யார்? எத்தனையோ ரகசியங்களை மனிதன் இறக்கும்போது கூடவே புதைந்து போய்விடுகின்றன. * சந்தோஷம் என்பதை எதை வைத்து முடிவு செய்வது.எல்லா சந்தோஷங்களும் மழை போலத்தானே எவ்வளவு நேரம் மழை தொடர்ந்து பெய்யமுடியும்.மழை நின்றவுடன் வெறுமை கவிழ்ந்துவிடுகிறதே. * சொர்க்கம் நிச்சயம் வானில் இருக்கமுடியாது.அது மனிதனின் மனதிற்குள் இருக்கிறது.மனித மனமே சொர்க்கத்தின் நுழைவாயில். * ஒருவன் மற்றவர்களுக்காக இல்லை என்றாலும் தனக்குத் தானே உண்மையை சொல்லிக் கொள்ளத்தானே வேண்டும். * கலையின் வேலை மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமில்லை.நெறிப்படுத்துவதும் வழிகாட்டுவதும் மேம்படுத்துவதும் அதன் வேலைகள். * மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகக்குறைவான நேரத்தையே தனக்காகச் செலவு செய்கிறார்கள்.பெரும்பகுதி வாழ்க்கைஅடுத்தவர்களுக்கானது.வேலைக்கானது.சம்பாத்தியத்திற்கானது.ஒரு வகையில் இது முட்டாள்தனமான செயல்.இன்னோரு வகையில் மனிதனின் வாழ்க்கை இதனால்தான் அர்த்தமுள்ளதாகிறது. * பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டி அடைந்தாலும் அதற்கு முழு ஆகாசமும் தேவைப்படுகிறது.அப்படிதான் மனிதனும்.இந்த மொத்த நிலமும் தனக்கே வேண்டும் என ஒருவன் ஆசைப்படுவதில் தவறு ஒன்றுமில்லை. * பெண்கள் விஷயத்தில் எல்லாமும் தலைகீழ்தான்.அவர்கள் ஏமாற்றியவனையும் மன்னிப்பார்கள்.அவனுக்காக உருகுவார்கள்.பிரார்த்தனை செய்வார்கள்.தெய்வமாக எண்ணி வணங்குவார்கள்.தன்னைத் தியாகம் செய்துகொள்வது பெண்களுக்குப் பிடித்தமானது. பண்ணை அடிமை முறைகள்.அதில் டால்ஸ்டாயின் எதிர்வினை கட்டுரைகள்.ரஸ்யாவில் ஏற்ப்பட்ட பஞ்சம்.பண்ணையாட்களுக்காக பள்ளி கட்டும் கனவு.ரஸ்யவில் ஜார் மன்னர் ஆட்சிகாலத்தில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் கண்காணிக்கும் அரசு நடைமுறை.அவரின் நண்பர்கள் வாயிலாக அவர் கொடுக்கும் நேர்காணல்கள்.புத்தகத்தில் இருக்கும் அட்டை படத்தில் இருக்கும் டால்ஸ்டாய் கண்முன் வந்துபோவர்.டால்ஸ்டாய் அக்ஸின்யாவை சந்திக்கும் போது பார்த்தும் பார்க்காமல் போது போன்ற காட்சி தனிசிறப்பு.எஸ்.ரா திரைத்துறையில் இருப்பாதல் ஒர் திறமையான ஓளிப்பதிவாளர் கண்ணோட்த்தில் காட்ச்சியிருக்கும்.நாவலின் இறுதி காட்சி அப்படி தரமாக நமக்கு காட்சிதரும். இந்தாண்டு தொடக்கத்திலேயே சிறந்த நாவலை வாசித்தேன் என்ற மனநிறைவோடு இந்தாண்டை தொடங்குகிறேன்.இந்த நாவலை எனது மகனுக்கும் படித்து காட்டினேன்.அவன் கேட்ட முதல் புத்தகம் எஸ்.ராவின் புத்தகம் என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி.வழக்கம் போல எஸ். ராவின மனித வாழ்வு மற்றும் மனித மனதை பற்றிய இருவரி வார்த்தைகள் கூடுதல் சிறப்பு.எனக்கு பிடித்த வரிகளை paari nollagam என்ற Instagram பக்கத்தில் பதிவிடுகிறேன்.நான் எழுதியதை தாண்டி இன்னும் பல உண்ணதமான பல பக்கங்கள் இருக்கின்றன.இந்தாண்டை எஸ்.ராவொடு தொடங்குங்கள்.நன்றி தோழர் எஸ்.ரா. நன்றி கணேஷ் பாரி 13-01-2022
Ganesh Pari 01-02-2022 04:59 pm