இன்று கல்வி என்பது பாடப்புத்தகத்தோடு நின்றுவிடுவதில்லை. பாடப் புத்தகத்தில் படித்து பரிட்சை எழுதுவது, பட்டம் பெறுவதற்கு மட்டுமே உதவும் . இத்தகைய பட்டங்களும் வேலையில் சேர்வதற்கு மட்டுமே பயன்படும். அடுத்து பதவி உயர்வு தேவை எனில் பலதரப்பட்ட அறிவையும் வளர்த்துக் கொண்டு திறமையாக செயல்படும் போதுதான் அந்த வாய்ப்பு கிட்டும். இத்தகைய திறமையை மாணவர்கள் படிக்கும்போதே வளர்த்துக் கொள்ள வேண்டும்.அப்படி வளர்த்துக் கொள்ள ஏதுவாக இந்தப் புத்தகம் அமையும் என்று நம்புகிறோம். இந்த 'மாணவர்களுக்கான பொது அறிவுக் கையேடு' என்பது உண்மையிலேயே ஒரு பொக்கிஷம் தான். அந்த அளவுக்கு இதில் பலதரப்பட்ட விஷயங்களும் தரப்பட்டுள்ளன. இதில் உள்ள விஷயங்களை பொக்கிஷம் என்று குறிப்பிடுவதற்கு முக்கிய காரணமும் உள்ளது. பொக்கிஷம் என்றால் பாதுகாத்து வைக்கப்பட்டு சந்ததிகளுக்குப் பயன்படுத்த ஏதுவாக இருப்பது தானே. அந்த வகையில் இதை பாதுகாத்து வைப்பதால் மாணவர்களுக்கு கல்வி பயிலும் போது மட்டுமல்லாமல் வேலையில் திறமையை காட்டுவதற்கும் இதிலுள்ள விஷயங்கள் பெரிதும் பயன்படும் என்று நம்பலாம்.
Be the first to rate this book.