இந்த நாடக மேடை அமைப்பில் இன்னொரு விசேஷம்: நம் நாடக மேடைகளில் மூன்று பக்கம் மறைத்து இருக்கும்; நாம் பார்க்கிற பக்கம் திறந்திருக்கும். இதில், ஒரு பக்கம், அதாவது பின் பக்கந்தான் மறைந்திருந்தது. மற்ற மூன்று பக்கங்களும் திறந்து இருந்தன. நாடக மேடை பக்கங்களில் அடைக்கப்படாமல் வெளியே முன் நீண்டு சபையோடு கலக்கிற மாதிரி வந்துவிட்டது. நாமும் நாடகக் காட்சியில் கலந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை எழுப்பியது. இன்னும் சின்னச் சின்னதாகப் பல புதுமையான உத்திகள் கையாளப்பட்டிருந்தன. நாடக அமைப்பு விஷயத்தில் 'கிருத்திகா' எழுத்தில் செலுத்தியுள்ள கவனம் குறிப்பிடத்தக்கது. நாடகத்தின் மையக் கருத்துக்கு ஏற்ப கதையின் ஒருமைப்பாட்டுக்கு உதவக்கூடிய வகையில் காட்சிகளையும் தகவல்களையும் அமைத்திருக்கிறார். இந்த நாடகம் பார்ப்பது ஒரு புது அனுபவம்தான்.
- எழுத்து
Be the first to rate this book.