பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘மானசரோவர்’ நாவலின் முக்கியமான பரிமாணம் என்று சொல்ல வேண்டும். நவீனத்துவத்தின் ஆதாரமான அறிவியல் பார்வையின் எல்லைகளை, போதாமையைத் தெளிவாகவே கோடிகாட்டும் நாவல், விளங்கிக்கொள்ள முடியாத வாழ்வின் புதிர்களுக்கான பதில்களையும் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டுத் தேடிச் செல்கிறது. பகுத்தறிவின் எல்லைக்கு வெளியே அது தீர்வையும் காண்கிறது. ஆனால் எல்லாருக்குமான தீர்வாக முன்வைக்காமல் அகவயமான அனுபவமாக, ஒரு சாத்தியமாக அதை அடையாளம் காட்டுகிறது. இந்தவகையில் இது அசோகமித்திரன் நாவல்களில் தனித்த இடத்தைப் பெறுகிறது. நாவலின் இந்தப் புள்ளி மேலும் விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகிறது.
--அரவிந்தன்
Be the first to rate this book.