தமிழகத்தில் உள்ள அரசு நல விடுதிகளின் இன்றைய நிலைமை ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட சேரிகளை போல் உள்ளது. விடுதி மாணவர்கள் நவீன உலகத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாதவர்களாய், ஆண்டாண்டு காலமாய் இருந்த கொத்தடிமைகள் போல் உழன்று கொண்டிருக்கிறார்கள். விடுதி எனும் வதை முகாம்களில், தன்னைத் தற்காத்துக் கொள்ள மட்டுமல்ல, நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் தான். அரசு விடுதிகளை நாடி மாணவர்கள் வந்தனர். ஆனால் "கொடுமை கொடுமையென்று கோயிலுக்கு போனா அங்க இரண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடின” கதையாய் மாறி போய்விட்டது இன்றைய விடுதி மாணவர்களின் நிலைமை. சிறைக் கைதிகளுக்கு கூட நல்ல உணவு, காற்றோட்டமான நல்ல சூழல் உள்ளது. ஆனால், தமிழக அரசு விடுதிகளோ 90 சதவீதம் போதிய கழிப்பறைகளும், தண்ணீர் வசதியும் இல்லாத விடுதிகளாகவே உள்ளன.
Be the first to rate this book.