மணற்கேணியில், நீண்ட கதைகளாக எழுதப்பட வேண்டியவை, கதையம்சமே அற்ற நினைவலைகள் போன்றவை, கவிதையாக எழுதப்பட வேண்டிய தருணங்கள், சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு பிறழ்வுகள், யாரும் எதிர் கொள்ளக்கூடிய கணங்கள்,
கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தின் பிரத்தியேக அனுபவங்கள் என்று பல்வேறு விதமான சந்தர்ப்பங்களைக் குறுங்கதை வடிவில் எழுதிப் பார்த்திருக்கிறேன்.
இவற்றை எழுதும்போது நான் அடைந்த கிளர்ச்சி அபரிமிதமானது.
மிகக் குறைந்த வார்தைகளில் வாக்கியங்களை உருவாக்க முடிந்ததும்,மிகக் குறைந்த வாக்கியங்களில் மனிதர்களும் இடங்களும் உருவான விதமும் பெரும் போதையை அளித்தன.
உரையாடல், விவரணை, விசாரணை என்று புனைகதையின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்ற எவ்வளவு குறைவான மொழிப் பிரயோகம் போதுமானதாய் இருக்கிறது என்பது தொடர்ந்து ஆச்சிரியம் தந்தவாறிருந்தது.
- யுவன் சந்திரசேகர்.
Be the first to rate this book.