ஒருவர் நலமுடன் வாழ்கிறார் என்பதை அவரது உடல் நலனை வைத்து மட்டும் வரையறுப்பது தவறு. அவரது மன நலன், கூடவே சமூகத்துக்கு அவரால் ஏற்படும் நலன்,சமூகம் அவர்பால் கொண்டிருக்கும் பார்வை இவை மூன்றும் சரியாக இருந்தால் மட்டுமே அவரை நலமுடன் இருக்கிறார் என்று கூறமுடியும்.
இச்சூழலில் மனநலன் குறித்த விழிப்புணர்வு மற்றும் மனநலன் சார்ந்த சிகிச்சை ஆகியன உலகில் வாழும் அனைவருக்கும் அடிப்படை மற்றும் முதன்மையான உரிமையாகும். அவை எந்த பாகுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இந்த நூலின் நோக்கமாகும்.
Be the first to rate this book.