மனித மனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்போது அல்லது சமூக ஒழுக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது ஏற்படக்கூடிய உணர்வு மாற்றமே ‘மனோதத்துவம்’. இன்றைய தலைமுறையினரிடம் இது முக்கிய இடத்தை வகிக்கிறது. உள்ளுணர்வு, அறியும் ஆற்றல், கவனம், மன உணர்வு அல்லது உணர்ச்சி வேகம், இயல்பு, ஊக்கம், மூளையின் செயல்பாடுகள், ஆளுமை, நடத்தை மற்றும் உள்ளார்ந்த தொடர்புகள் ஆகியவற்றைக் கொண்டதே மனிதனின் அன்றாட செயல்முறைகள். மனிதர்களால் திருத்திக்கொள்ள முடியாத தவறுகள் இன்று ஏராளம். தன்னையும் தன் சமூகத்தைச் சுற்றியும் என்ன நடக்கிறது, என்ன நடக்க இருக்கிறது, குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்கான நம்முடைய செயல்முறைகள் எப்படி இருக்க வேண்டும், பிறரின் மனதில் பொதிந்துள்ள கருத்தை எவ்வாறு அறிவது போன்ற பல்வேறு சிந்தனைகளுக்கான பதில்கள் நம்மிடையே இருக்கின்றன. ஆனால், அவற்றை உணர்ந்துகொள்ள ஏனோ நாம் முயற்சிப்பது இல்லை. விளைவு, பிரச்னைகளை அலசி ஆராயத் தெரியாமல் எளிதில் சிக்கிக்கொள்கிறோம். குடும்பம், சமூகம், உறவுகள், நண்பர்கள் என, மனிதன் இருக்கும் இடம்தோறும் மனோதத்துவரீதியிலான பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. உணர்வுரீதியான, உளவுரீதியான, உறவுரீதியான மனநல நிகழ்வுகளையும், அதற்கு டாக்டர் மாத்ருபூதம் தரும் பதில்களையும் பழகுத் தமிழில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் கதிரேசன்.
Be the first to rate this book.