தற்செயலாகக் காணக்கிடைத்த நூல் ‘மனமே! நலமா?’. என்னை மீண்டும் அந்த நூலைப் படிக்க வைத்தது. இதை எழுதிய டாக்டர் சிவ.நம்பி சென்னையில் மனநல மருத்துவராகப் பணியாற்றுகிறார். எழுதப் படிக்கத் தெரிந்த அனைத்து தமிழ்ர்களும் பயன்பெறக்கூடிய முறையில் மனநோய், அதன் ஆரம்ப அறிகுறிகள், ஓரளவு சுயமாக அந்த நோயை எதிர்கொள்வது எப்படி ஆகிய விஷயங்கள் பற்றி எளிய நடையில் – ஆனால் விஞ்ஞானபூர்வமாக – எழுதியிருக்கிறார். சிறிய புத்தகமானாலும் தலைப்பின் பரிமாணங்கள் பலவற்றை படிப்போருக்குத் தெரியப்படுத்துகிறது. நாம் சைக்காலஜி என்ற சொல்லை எது எதற்கோ பயன்படுத்தினாலும் மனநல மருத்துவம் ‘சைக்கியாட்ரி’ இன்றைய சமூகத்தில் ஒரு நுண்ணிய, அவசியமான துறை. மூச்சு விடுதலைப் பயன்படுத்துவது பற்றி அவர் எழுதியிருக்கும் வரிகள். அவருடைய பரந்த பார்வையைக் காட்டுகிறது.
Be the first to rate this book.