இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களுள் இரண்டாம் இடம் வகிப்பது ஹதீஸ் எனும் நபிமொழிகள்தாம். அந்த நபிமொழிகளைச் சரியான முறையில் புரிந்துகொள்ளாததுதான் இன்று முஸ்லிம் சமுதாயத்தின் பிளவுகளுக்கும் பின்னடைவுகளுக்கும் முதன்மைக் காரணம் எனலாம். நமது நாட்டைப் பொறுத்தவரை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்குப் பெருமானார்(ஸல்) அவர்களின் பொன்மொழிகளை விளங்கிக்கொள்வதற்கான வாய்ப்பு மிக அரிதாகவே இருக்கிறது. எனவே அதைப் பற்றிய தெளிவை சமூகத்துக்கு வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.
‘அல்ஹஸனாத்’ இதழில் அஷ்ஷெய்க் காலித் முஹம்மத் மின்ஹாஜ் (இஸ்லாஹி) தொடர்ந்து எழுதிவந்த நபிமொழி விளக்கம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பகுதியாகும். அந்த விளக்கவுரைகள் தனி நூலுருவில் வருவது தமிழ்பேசும் மக்களுக்குக் கிடைத்த ஓர் அருளாகும்.
இந்நூலின் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு என்னவெனில், நபிமொழிகளைத் தற்காலச் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லும் வகையில் ஒப்பாய்வு செய்து, தெளிவாக எடுத்துரைப்பதுதான். அந்த வகையில் இந்த நூல் தமிழ் பேசும் மக்களிடையே மகத்தானதொரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். அரபிக் கல்லூரிகள், மதரசாக்கள், நூலகங்கள் மட்டுமின்றி ஒவ்வொருவர் இல்லத்திலும் இந்த மணிச்சொற்கள் மணம் வீச வேண்டும்; நம் வாழ்வின் ஒவ்வொரு துறையும் அந்த நறுமணத்தால் கமழ வேண்டும் என்பதே நமது வேணவா.
Be the first to rate this book.