நெப்போலியன் ஹில், 1883ம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள விர்ஜீனியா மாநிலத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஹில் தன்னுடைய இளம் வயதிலிருந்தே, ஆன்ட்ரூ கார்னகி, தாமஸ் எடிசன், அலெக்சான்டர் கிரகாம் பெல் போன்ற மாபெரும் சாதனையாளர்களைப் பற்றிக் கற்றறிந்தார். வெற்றி அறிவியலில் குறிப்பிடத்தக்கதொரு சிந்தனையாளராகவும் வல்லுநராகவும் அவர் உருவெடுத்தார். மகத்தான சாதனைகளைப் படைத்த ‘சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்’ என்ற புத்தகம் 1937ல் வெளியானது. இது கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுவரை இந்நூல் 7 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. அவர் ஒரு மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும்கூட. அமெரிக்கா நெடுகிலும் பயணம் செய்து வெற்றிக் கொள்கைகள் குறித்து எண்ணற்ற ஊர்களில் பேசி இலட்சக்கணக்கானோரை அவர் ஊக்குவித்துள்ளார். 1962ல் அவர் ‘நெப்போலியன் ஹில் அறக்கட்டளை’யை நிறுவி, தனது கொள்கைகள் என்றென்றும் தழைத்திருக்க வழி வகுத்தார். 1970ல் தனது 87வது வயதில் அவர் காலமானார்.
Be the first to rate this book.