காலத்தை வென்ற ஞானத்தின் நாயகன் கலீல் ஜிப்ரான் மண்ணுலகை விட்டு அவர் மறைந்து போய் என்பத்தைந்தாண்டுகள் ஆன பின்னும் உலகில் அதிகம் விற்பனையாகும் இலக்கியப் படைப்புகளில் தொடர்ந்து முதல் வரிசையில் இடம் பெற்று வருபவை ஜிப்ரானின் ஞானக் களஞ்சியங்கள்.
ஒரு திறனாய்வாளன் குறிப்பிட்டதைப் போல், ‘லெபனான் நாட்டுச் செடார் மரங்களிடையே உலவினாலும், நியூயார்க்கின் விண் முட்டும் கோபுரங்களிடையே திரிந்தாலும் காணும் பொருள்களை எல்லாம் தன் ஆன்மாவின் கண்ணடிகளாகவே கண்டவர்’ ஜிப்ரான்.
அரபி மொழியிலும் ஆங்கிலத்திலும் அமர சிருஷ்டிகளை அளித்துள்ள கலீல் ஜிப்ரானை மெய்ஞ்ஞானி, கலக்காரர், தத்துவ வித்தகர், சமய அறிஞர், கவிஞர், தீர்க்கதரிசி என அவரவர் உணர்ந்தபடி ஆராதிக்கின்றனர்.
Be the first to rate this book.