காலத்தின் நெடுங்கதவுகளை திறக்க,
அன்பின் வலி தாங்கிய
இசாக்கின் இதயத்திலிருந்து
வெளிப்படுவன வார்த்தைகளல்ல.
துகள்களின் வெளிச்சத்திலிருந்து
தூரதேசங்களைப் பார்க்கும் அவன்,
கண்ணீர் கரைசலில்
காலத்தைக் கொப்பளிக்கிறான்.
கள்ளிகள் நிறைந்த
அவன் கானகத்தில்
பூக்கள் தங்கள் புனைபெயராக
அவனையே கொள்ளுகின்றன.
அன்பில் அவனில்லை
அன்பாகவே அவனிருக்கிறான்.
கவிதைகள் அவன்
கைத்தலத்தைப் பற்றி
தங்கள் அகத்தையும் முகத்தையும்
இத்தொகுப்பில்
அலங்கரித்துள்ளன.
பிரியமுடன்
யுகபாரதி
Be the first to rate this book.