‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெயர்ப்பாளன், செயற்பாட்டாளன் என்கிற அடையாளங்களெல்லாம் தற்காலிகமானவை, சமயங்களில் கூச்சத்திற்குரியவை என்றே நான் புரிந்திருக்கிறேன்
இலக்கியம், கோட்பாடு, திரைப்படம், அரசியல், கவிதை மொழியாக்கம் என இதுவரையிலும் என்னுடைய 30 நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அன்றாட வாழ்வு, இலக்கிய வாழ்வு, அரசியல் வாழ்வு என்பதற்கிடையில் என்னளவில் மலையளவு பிளவுகள் ஏதும் இல்லை. நண்பர்களுக்கான கடிதமும் முதல்காதல் கவிதைகளும் இலக்கியம் என்றே நான் கருதுவதால் எழுதத்துவங்கி அரைநூற்றாண்டு ஆகிவிட்டது. பிரசுரம்தான் எழுதுவதற்கான அடையாளம் எனில் எழுதத்துவங்கி 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றும்போல எனக்கு எல்லாவகையிலும் நண்பர்களும் உடன்பயணிகளும் வழிப்போக்கர்களும், கருத்து எதிரிகளும் உண்டு. தற்போது இலண்டனுக்கு வெகு தொலைவிலுள்ள குறுநகரொன்றில் வசிக்கிறேன்.
‘எமது வாழ்வு இவ்வாறுதான் கொண்டு செல்லப்படவேண்டும் என நாம் திட்டமிட்டுச் செயலாற்றிக் கொண்டிருக்கும்போது, எமக்கு நேர்ந்து கொண்டிருப்பதுதான் வாழ்வு’ எனும் பீட்டில்ஸ் பாடகன் ஜான் லென்னானது கூற்றை எனது தலையினுள் எங்கெங்கும் நான் கொண்டு திரிகிறேன்.
Be the first to rate this book.