திருச்செந்தூர் கோவிலுக்கு மறுநாள் மாலை ஆச்சி என்னைகூட்டிக்கொண்டு போனாள். “முருகா! முருகா!” என்று அதீத பரவசத்துடன் சன்னதம் வந்தது போல சாமி கும்பிட்டாள். எனக்கு பயமாகக்கூட இருந்தது. வேண்டுதல்களை எல்லாம் எல்லோருக்கும் கேட்கும்படியாக வாய்விட்டே சொன்னாள்.
தனக்கு பிடிக்காத உறவினர் ஒருவருக்கு தண்டனை வேண்டினாள் “பவுண்டு வீட்டுக்காரன ஜெயிலுக்கு அனுப்பு முருகா! எப்பவும் எசளி பண்ணிக்கிட்டே இருக்கான். அவன் நல்லவனே இல்ல பாத்துக்க” என்றாள்.
(நூலிலிருந்து)
R.P. ராஜநாயஹம், தான்கடந்து வந்த மிகக் கடுமையானபாதையை தமது நீண்ட பயணத்தின் அனுபவத்திலிருந்து திரும்பிப்பார்க்கையில் மணல் கோடுகளாய் நீள்கிறது. இரத்தமும் சதையுமான மனிதர்களும், நாம் வியக்கும் ஆளுமைகளும் Juxtaposition செய்யப்பட்டு ஒரு கண்காட்சி போன்ற நினைவுச் சுவடுகளை சிறிய கேன்வாஸில் வரைந்து வைத்துள்ளார்.
Be the first to rate this book.