குழந்தை இலக்கியம் அல்லது சிறுவர் இலக்கியம் யாருக்காகப் படைக்கப்படுகிறது? 3 முதல் 16 வயதுவரை உள்ள பிள்ளைகள் படிப்தற்காக எழுதப்படுபவையே குழந்தை இலக்கியம். மூன்று எட்டு வயதினருக்கான பிரிவு, மழலையார் பிரிவு. ஒன்பதுமுதல் பதினொரு வயதினருக்கான பிரிவு, குழந்தையர் பிரிவு. பன்னிரண்டுமுதல் பதினாறு வயதினருக்கான பிரிவு, சிறுவர் பிரிவு, இன்ன வயதினருக்கு இன்ன சொற்கட்டு, இன்ன பொருள் என்று அந்த வயதினர் ஏற்றுக்கொள்ளவும் எளிதாகப் புரிந்துகொள்ளவும் கூடியவகையில் குழந்தை இலக்கியத்தை வயதுக்கேற்ற வகையில் தரம் பிரித்துப் பாடல்களை வகைப்படுத்தியிருக்கிற என்னுடைய இந்த முயற்சி, குழந்தை இலக்கிய வரலாற்றில் முதல் முயற்சி என்ற இடத்தை நிச்சயம் பெறும். இந்த நோக்கில் குழந்தை இலக்கியம் படைக்கப்படுகிற ஒரு போக்கும் இனி ஏற்படலாம்.
Be the first to rate this book.