தங்களின் நாவல்களில், சிறுகதைகளில் பெரும்பாலும் அனைத்தும் படித்திருக்கின்றேன். ஒவ்வொன்றும் எனக்கு பல விஷயங்கள் கற்றுத் தந்திருக்கின்றன. இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தது, என்னை பாதித்தது "என்னுயிர் தோழி". எல்லோருக்கும் கண்ணனை தெரியும், கம்சனை தெரியும், கண்ணன் எட்டாவது குழந்தை என்றும் தெரியும். அவனுக்கு முன்னேற பிறந்தவர்களை கம்சன் அழித்தான் என்பதும் தெரியும். ஆனால் எத்தனை பேர் நம்மில் வசுதேவரைப் பற்றியோ, தேவகி பற்றியோ யோசித்திருப்போம். அவர்களின் உணர்வுகள் குறித்து கவலைப்பட்டிருப்போம்.தங்களை நினைக்கும் போதெல்லாம் வாசுதேவரும், வாசுகியும் என் நினைவில் சேர்ந்தே எழுவர். அவர்களின் உணர்வுகளை தங்கள் வார்த்தைகளில் செதுக்கி ஒரு அழியா காவியம் அல்லவா படைத்துள்ளீர்கள். மனித மனங்களின் உணர்ச்சிகளைத் தங்களை போல் எவரும் எழுதி நான் காணவில்லை.
Be the first to rate this book.