‘‘மனித மனம் சஞ்சலமுடையது, வலிமையுடையது, கலங்க வைப்பது, அடக்க முடியாதது, காற்றைப்போல் அதை அடக்குவது கடினமானது’’ என்று கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. நம் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்களே நம்மை வழிநடத்துகின்றன. மனதால் முடியாதது எதுவுமில்லை. நம் மனதுக்குள் படரும் பயம், படபடப்பு, கோபம், வெறுப்பு.. என சின்னச் சின்ன விஷயங்களை உதாசினப் படுத்திவிட்டால், அதுவே பின்னாளில் மனதைப் பெரிய அளவில் பாதித்து வாழ்க்கையை திசை மாற்றிவிடும்.
இப்படி நம் மனதில் எழும் சின்ன சின்ன மாற்றங்களை எடுத்துக்கூறி அவை ஏன் நடைபெறுகின்றன, அதற்கான தீர்வு என்ன என்பதைக் கூறுகிறது இந்த நூல். உதாரணமாக ‘‘Body Dysmorphophobia என்கிற ஒரு வகை பதற்றக் கோளாறு நோய் இருப்பவர்களுக்கு, “என் மூக்கு கோணலா இருக்கு, என் பல்லு கலர் மாறி இருக்கு, என் தோளில் ஏதோ தேமல் இருக்கு’’ என்று தங்கள் உடல் அமைப்பைப் பற்றி ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து, சதா சர்வ காலமும் அதைப்பற்றியே யோசித்து, கவலைப்பட்டு, அதை மறுசீர் அமைப்பதைப் பற்றிய கற்பனையிலேயே இருப்பார்கள்.’’ என்பன போன்ற மனம் சம்பந்தப்பட்டவற்றை விளக்கி ஜூனியர் விகடனில் டாக்டர் ஷாலினி எழுதிய தொடரின் தொகுப்பு நூல் இது! மனம் சார்ந்த பிரச்னைகளையும் அதற்கான தீர்வையும் பேசுகிறது இந்த நூல்.
Be the first to rate this book.