நம்மால் கவலையில்லாமல் வாழ்க்கை நடத்த முடியும் என்று இந்தக் கணத்திலிருந்து நீங்கள் நம்ப ஆரம்பித்தாலே போதும். அதற்குப்பின் நடப்பதெல்லாம் நல்லதாகவே இருக்கும்.
இந்த நூல் உங்களைக் கவலைப்படாமல் இருக்கச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதைப் படித்தால் நீங்கள் கவலையில்லாமல் இருக்கலாம். அதற்கு இதில் மிகவும் எளிமையான முறையில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகளை நீங்கள் சற்றுப் பொறுமையாக அசைபோட வேண்டும்.
உங்களது வாழ்க்கையுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கவலைகளானது உறைந்து அது மன இறுக்கத்தில் கொண்டு போய் உங்களை விடலாம். அல்லது மன இறுக்கம் உருகி உங்கள் கவலைகள் பெருகலாம். இந்த இரண்டு விளைவுகளுமே உங்கள் உடல் நலத்தையும் பொருளாதார வளத்தையும் பாதிக்கக் கூடியவை.
உங்கள் உடலும் மனமும் எப்போதும் உற்சாகமாக இயங்குவதற்கு இங்கு சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை நீங்கள் அப்படியே பின்பற்றினால் போதும். உங்கள் கவலைகள் உங்களிடமிருந்துதான் தோன்றுகின்றன. நீங்களாகவேதான் அதை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.
உங்களிடம் தோன்றும் சின்னச் சின்னக் கவலைகளே நாளடைவில் பெரிய கவலைகளாக வளர்ந்து உங்களுக்குப் பலவிதமான தொல்லைகளைத் தருகின்றன. இந்தக் கவலைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டால் நீங்கள் சந்தோசமாக வாழலாம்.
Be the first to rate this book.