இமையத்தின் கதைகளின் பாத்திரங்கள் ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய கையில் இல்லை. அது மேல்ஜாதியினரின், மேல்வர்க்கத்தினரின் அதிகாரக் கரங்களில் அடகுவைக்கப்பட்ட வாழ்க்கை; அன்றாட ஜீவனத்துக்கு அல்லல்படும் வறுமை வாழ்க்கை; மனித மரி யாதை இல்லாத வாழ்க்கை. இந்த நடைமுறை வாழ்க்கையை இமையம் கதையாக்குகிறார். அவர் வறுமையைக் கதைகளின் கருவாக்கவில்லை; வறுமையைக் கதைகளின் பின்புலமாக்குகிறார்.
இந்தக் கதைகளின் சிறப்பை இலக்கியத் தோரணைகள், இலக்கிய உத்திகள் நிர்ணயிக்கவில்லை. அறிவுபூர்வமாகத் தெரிந்தெடுத்த சமூகத் தத்துவங்கள் நிர்ணயிக்கவில்லை. அதை யதார்த்தமான வாழ்க்கை நிர்ணயிக்கிறது. கதையின் சிறப்பு நிஜத்தின் சிறப்பு. கதைகள் சொல்லும் நிஜ வாழ்க்கையைப் போல, அலங் காரம் இல்லாமலே கதைகளும் நிஜ வடிவம் எடுக்கின்றன.
Be the first to rate this book.