மாமல்லபுரம் சாளுவன் குப்பத்திலுள்ள புலிக்குகை உலகக் கலைவெளியில் வேறெங்கும் காணவியலாத விந்தையான படைப்பு. எத்தனையோ விளக்கங்களை இதுவரை பெற்றுள்ள இப்புதுமைச் சின்னம், சிவனுக்கும் துர்க்கைக்குமான கூட்டுக் கோயில் என்பதையும் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும் பிற உயிர்களையும் கண்ணன் காத்த கிருஷ்ண மண்டபச் சிற்பத்தொகுதி, சங்க இலக்கிய முல்லைத் திணைப் பாடல்களை உள்வாங்கிய படைப்பு என்பதையும் மாமல்லைக் குன்றையே கோவர்த்தனமாகச் சமைத்த வியக்கவைக்கும் ஓர் அற்புத இயங்கு சிற்பம் (Dynamic Sculpture) என்பதையும் இந்நூல் நிறுவுகிறது.
Be the first to rate this book.