இஸ்லாம் என்பதை ஒரு வாழ்வியல் நெறி என கூறும்போது. ஆன்மிகம் முதல் ஆட்சி அதிகாரம் வரை அனைத்தையும் உள்ளடக்கிய மதம் என்பதே அதன் உள்ளார்ந்த அர்த்தமாகும். முதல் உலகப் போருக்குப் பின், முஸ்லிம்களுக்கான உலகு தழுவிய தலைமை என்பது மெல்லக் கரைந்து, அந்தந்த தேச அரசியலுக்குள் முஸ்லிம்களின் தலைமை சுருக்கப்பட்டது.
தேச அரசுகள் நிலை பெற்று, அதுதான் இனி நீடித்த நடைமுறை என்றாகி விட்ட பின்பு, 'அரசியல் இஸ்லாம்' என்ற சிந்தனை இஸ்லாமிய சிந்தனையாளர்களிடம் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்தப் பின்னணியில், பனிப்போர் காலகட்டம் உச்சத்தில் இருந்த போது, அமெரிக்க மண்ணில் இஸ்லாமிய அழைப்புடன், அந்தத் தேசத்தை தீவிரமாக எதிர்த்த மால்கம் X-ன் பார்வையில், 'அரசியலில் இஸ்லாம்' என்ன வடிவம் எடுத்தது என்பதை விளக்குகிறது இந்த நூல்.
Be the first to rate this book.