மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் விளக்கமளிக்கும் வண்ணம் ஏராளமான எடுத்துக் காட்டுகள் - மேதைகள் பலரின் மேற்கோள்கள் அடங்கிய அருமையான கருவூலமாக இந்தப் பெரிய நூல் விளங்குகிறது... இந்நூலின் ஒவ்வோர் எடும் சிறப்புமிக்கது...
- முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்
பல்வேறு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட அரசியல் வல்லுநர்கள் எவரும் மறுக்கவொண்ணாது ஏற்குமாறு அமைந்துள்ளது இந்நூல்... கல்லூரிப் பாடநூல் போன்று பகுதி பகுதியாக விளக்கப்பட்டுள்ளது.
- இனமானப் பேராசிரியர் க. அன்பழகன்
இந்திய அரசியல் திட்டத்தில் மத்திய அரசாங்கத்திற்கு மித அதிகாரங்களும், மாநிலங்களுக்குக் குறைவான அதிகாரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வதிகாரப் பிரிவினையைப் பற்றி விரிவாக, திரு. ஆனந்தன் அவர்கள் ஆராய்ந்திருக்கிறார். அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற வாதங்களையும், பின்னர் இந்தியக் கூட்டாட்சியைப் பற்றி அவ்வப்பொழுது செய்யப்பட்ட ஆராய்ச்சிகளையும் சான்றுகளுடன் எடுத்துக் கூறியிருக்கிறார். பொதுவாக இந்நூலில் சொல்லப்பட்ட விளக்கங்கள் நியாயமானவையே...
- க. சந்தானம், ('சுயராச்சியா' முன்னாள் ஆசிரியர்)
Be the first to rate this book.