நோபல் பரிசு பெற்ற நாடகாசிரியரும், குர்திஸ் விடுதலை ஆதரவாளருமான ஹெரால்ட் பின்ட்டர் சொல்கிறபடி, குர்திஸ் மக்களின் துயரமே இக்கவிதைகளைப் பிறப்பித்திருக்கிறது. வலியையும் சோகத்தையும் மட்டுமே இக்கவிதைகள் கொண்டிருக்கவில்லை, கொன்றொழிப்பிற்கு எதிராக வாழ்வதற்கான திடவுணர்வையும் இக்கவிதைகள் கொண்டிருக்கின்றன. குர்திஸ் மக்களின் மீதான கொடூரமான ஒடுக்குமுறை, வெளி உலகினால் அதிகம் கண்டு கொள்ளப்படாத அவர்களது நிராதரவான கதறல்கள் இக்கவிதைகளில் வெளிப்படுகின்றன. இக்கவிதைகள் நிராதரவானவை, கோபம் கொண்டவை, அழுத்தமானவை, நம்மைப் பற்றிப் பிடிப்பவை. இக்கவிதைகள் நேரடியான உடனடி அனுபவங்களில் இருந்து பிறக்கின்றன.
Be the first to rate this book.