நீலப்புலியும், மரகத அழகியும் வாழும் அதிசய மலைகளைக் கண்டு ரசிக்க வாருங்கள்! பச்சை நிறத்தில் உச்சிமலையில் ஒளிரும் ரத்தினக்கற்களைத் தொட்டெடுக்கலாம். மலையகத்தில் பதுங்கியுள்ள பூதத்தின் வாய்புகுந்து விளையாடித் திரும்பலாம். அடர்வனத்தில் உங்களை வரவேற்க உயிர்த்தோழி நீலி காத்திருப்பாள்.
கொ.மா.கோ இளங்கோ – ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களைப் படைத்தவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சிறந்த குழந்தை எழுத்துக்கான பல விருதுகளைப் பெற்றவர். இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன.
Be the first to rate this book.