மூன்று தொகுதிகளிலிருந்து கருத்துக்களை தொகுக்கிற போது ஒழுங்கற்றுப்போகும் அபாயம் உள்ளது. ஆனால், ஜூலியன் போர்ச்சார்ட் தர்க்கவியல் ரீதியாக ஒரு ஒருங்கிணைப்புடன் மார்க்சின் சிந்தனைக்கு எவ்வித பாதிப்பும் நேராமல் மிகத் திறமையாக தொகுத்து விளக்கியுள்ளார். ஜூலியன் போர்ச்சார்ட்டர் 30 ஆண்டு காலமாக மார்க்சின் மூலதனத்தை வாசித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வந்தவர். அந்த கடும் உழைப்பு இந்த நூலின் தெளிவான விளக்கங்களில் இழையோடுகிறது. தீவிர களச் செயல்பாட்டாளராக விளங்கிய ஜூலியன் போர்ச்சார்ட்டர் முதல் உலக யுத்தம் நடந்தபோது மார்க்சிய இயக்கத்திற்கு ஜெர்மனியில் ஒரு தேக்கம் நிலவிய சூழலில் கிடைத்த ஓய்வினைப் பயன்படுத்தி இந்த நூலை எழுதி முடித்தார்.
Be the first to rate this book.