தனது ஜு.வி. பத்திகளில் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கும் ரவிக்குமார், அதற்கான பல நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்கிறார். ஒரு உதாரணம்… கட்டாயக்கல்வி பற்றிய பத்தியில், அந்தச் சட்டம் சிறப்பானதுதான் என்றாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை விரிவாகக் கூறுகிறார். அப்போதிலிருந்து இப்போதுவரை தொடரும் ஒரு முக்கியமான பிரச்சனையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன் -ஆசிரியர்களின் தரம். இதைப் பற்றி அறுபத்தி நாலாவது பத்தியில் ரவிக்குமார் கூறுகிறார். கட்டாயக் கல்வி என்பது மாநிலத்துக்கும் மக்களுக்கும் நன்மை தரக்கூடியது என்று வாதிடும் அவர், அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முக்கியமான சிக்கலாக ஆசிரியர்களின் தரத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அந்தப் பத்தியில், “தற்போதுள்ள நிலையில் எந்தச் சிறப்பான சட்டத்தைக் கொண்டு வந்தாலும் நாம் தரமான கல்வியை வழங்குவது சந்தேகம்தான். ஏனென்றால் புற்றீசல்போல் பெருகிவிட்ட ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளால் உற்பத்தி செய்யப்படும் ஆசிரியர்கள் நல்ல கல்வியை வழங்கக்கூடிய திறன்பெற்றவர்களாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை” என்கிறார்.
தமிழகத்திலும் இந்தியாவிலும் இந்தக் காலகட்டத்தில் (2006–2010) நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கும், அரசியலைப் பற்றிய பார்வையில் கூர்மையை வளர்த்துக்கொள்ள விரும்பும் அறிஞர்களுக்கும் ரவிக்குமாரின் 5 பாகங்கள் கொண்ட இந்த முழுத்தொகுப்பும் ஒரு பொக்கிஷம்.
ஆர். பகவான்சிங்
மேனாள் நிர்வாக ஆசிரியர், டெக்கான் க்ரானிக்கிள் நாளேடு
Be the first to rate this book.