…இதனால் ஆட்சி போனாலும் பரவாயில்லை.பணம் கொடுத்திடுவோம்.அதாவது இந்திய அரசாங்கத்தை மீறி,அரசியல் சட்டத்தை மீறி,அந்நிய நாட்டு உறவுகளுக்குப் பாதகமாக இலங்கையில் போராடுகின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவி ஒரு அரசாங்கமே செய்யுதுன்னா,அது சட்டவிரோத நடவடிக்கைன்னு நம்ம வெளிய போயிரலாம்’. -எம்.ஜி.ஆர் “ஈழத் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவரே!தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும்,ஊக்கமும் கொடுத்த செயல்வீரரே!தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது.என்மீது கொண்டிருந்த அன்பையும்,ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது.தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர்.அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.”
- தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
Be the first to rate this book.