வீரமாமுனிவரின் ஒப்பற்ற தமிழ்த்தொண்டு அனைவரும் அறிந்தது. இத்தாலியில் இருந்து இந்திய மண்ணில், கிறிஸ்தவப் பணிபுரிய வந்த தொண்டரான அவரது இயற்பெயர், ‘கான்ஸ்தன்ஸ் ஜோசப் எசோபியோ பெஸ்கி’ என்பதே. தமிழில் வீரவளன் என்றும், தைரியநாதர் என்றும், பின் வீரமாமுனிவர் என்றும் மாற்றம் கண்டது.
தூயமுனிவர், இஸ்மத் சந்நியாசி, மலர்களின் தந்தை, புறநிலைக் காப்பியனார், குளுந்தமிழ்ச் சாத்தன், தெருட்குரு, வீர ஆரியவேதியன், திருமதுரைச் செந்தமிழ்த்தேசிகன், ராஜரிஷி, குருசாமியார் என்ற பெயர்களாலும் அவர் அழைக்கப்பட்டார் என்பது போன்ற தகவல்களுடன், அவரது வரலாற்றை முதல் கட்டுரை விவரிக்கிறது.
பாரதியின் வாழ்வில் புதுச்சேரி, தமிழர் பார்வையில் தீபாவளி, மகாகவி தண்டி, உள்ளிட்ட பதினேழு கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்த நூல். நூலின் தலைப்பாக அமைந்துள்ள கட்டுரையில், கவிஞர் தமிழ் ஒளியின் வாழ்க்கைச் சம்பவங்கள், அவரது படைப்புகளின் ஆழமான சமூகப் பார்வை விவரிக்கப்படுகிறது.
கவுதம நீலாம்பரன்
Be the first to rate this book.