தமிழகத்தில் தலித் இயக்க எழுச்சிப் பாடலாக அறியப்பட்டிருக்கும் இன்குலாபின் “மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா” என்ற பாடலைத் தன் தனித்துவமிக்க குரலால் தமிழ்க் காற்றில் தவழ விட்டவர் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன். பறை என்னும் தமிழ்ப் பண்பாட்டு வாத்தியத்துடன் தன் இறுதி மூச்சுவரை இணைபிரியாத் தொடர்பிலிருந்த அவரின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நூல் இது.
ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களையும் அவர்களின் விடுதலைக்கான வழிமுறைகளையும் கலை வழியே தொடர்ந்து வெளிப்படுத்திவந்தவர் மக்கள் கலைஞர் குணசேகரன். அவருக்கும் தமக்குமான தொடர்புகளைப் பற்றியும் அவருடைய படைப்புகள் பற்றியும் தமிழ்ச் சமூக, அரசியல் கலை இலக்கியச் சூழலில் செயல்பட்டுவரும் பல்வேறு ஆளுமைகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு கலைஞருக்கும் இப்படியான நூல் ஒன்று அமைவது அவசியம் என்னும் புரிதலைத் தரும் நூல் இது.
Be the first to rate this book.