வெவ்வேறு சாதியைச் சார்ந்த ஆணும் பெண்ணும் காதல் செய்வதை எதிர்ப்பது, அவர்களைப் பிரிப்பது, முடியவில்லையென்றால் கொலைசெய்து, அவர்களைத் தெய்வங்களாக்கிவிடுவது என்கிற போக்கில் பல தெய்வங்கள் உருப்பெற்றுள்ளன.
நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிரித்தெடுக்க முடியாப் பண்பாட்டுவெளியில், வாய்மொழியாகச் சொல்லப்பட்டு நிலங்களெங்கும் திரிபுகளடைந்து காற்றில் மிதந்துகொண்டிருக்கும் இத்தெய்வக் கதைகள், மக்களுள் மக்களாக வாழ்ந்து மறைந்த எளியவர்களின் கதைகள். வழிபாட்டுக்குரிய மனிதர்களின் கதைகள். மனிதர்கள் தெய்வமாக்கப்பட்டதன் கதைகள். இக்கதைகள் எளிய மக்களின் நிலவெளியில் நிகழ்ந்தவை. காலங்களைக் கடந்தும் அந்நியப்படாமல் அவர்களின் வாழ்வோடு பிணைந்து கிடப்பவை.. எழுத்தில் வருவதன் மூலம் இக்கதைகள் பெரும் மக்கள் பரப்பை அடையும் சாத்தியம் கொண்டவை.
Be the first to rate this book.