கல்வி, அறிவியல், சுற்றுச்சூழல் சார்ந்து ஏற்படும் பிரச்சனைகளுக்கு மக்கள் அறிவியல் பார்வையிலிருந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கூர்மையான விமர்சனத்தை முன்வைத்து வெவ்வேறு பிரிவுகளில் ஏற்படுத்தும் அதன் பாதிப்புகள் பற்றியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் மூடநம்பிக்கைக்கு எதிராக, கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக, இந்துத்துவா வன்முறை மற்றும் அவர்களின் பொய் புரட்டுகளுக்கு எதிராக, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நாடு முழுவதும் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் அனுசரிப்பதன் முக்கியத்துத்தை வலியுறுத்தியும், NCERT பாடப்பகுதியில் சார்லஸ் டார்வின் பாடம் நீக்குதலுக்கு பின்னுள்ள அரசியலை விளக்கியும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான சட்டங்களை எதிர்த்தும் என மொத்தம் 30 கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
மக்கள் அறிவியல் இயக்கத்தின் குரல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் ஒவ்வொரு கட்டுரையும் அமைந்துள்ளது. எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம் அது அறிவியல் மனப்பான்மை வளர்ச்சியோடு வளர வேண்டிய தேசம் என்பதை அழுத்தம் திருத்தமாக ஒவ்வொரு கட்டுரையின் மையப்பொருளாக குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் பேராசிரியர் ராஜமாணிக்கம்.
Be the first to rate this book.