மக்கா-மதீனாவைச் சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்து ஆட்சிசெய்துவரும் சவூதுக் குடும்பத்தினர், 1987-ம் ஆண்டு ஹஜ்ஜு காலத்தில் மக்காவில் வைத்துச் சுமார் 500 ஹாஜிகளைத் தடியடி நடத்தியும், துப்பாக்கிகளால் சுட்டும் ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்த பெருங்கொடுமை பற்றிய நேரடி அறிக்கையே இந்த நூல். இந்த நிகழ்வு சவூதுக் குடும்பத்தின் உண்மை இயல்பினை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்ததெனினும் மேற்குலகின் ஆதரவு, தனது பொய்ப்பிரச்சாரப் பித்தலாட்டங்கள் மற்றும் அரசவை ‘ஆலிம்களின்’ துணைகொண்டு, உலக முஸ்லிம்கள் மத்தியில் இந்நிகழ்வு உண்மையில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய அதிர்வினைக் கட்டுப்படுத்துவதில் அது பெருமளவு வெற்றிபெற்றுவிட்டது என்றே கூறவேண்டும். இந்தத் துயர நிகழ்வை நேரில் கண்ட நூலாசிரியர், அதனை விவரிப்பதுடன் நின்றுவிடாமல், எந்தக் கருத்தமைவில் வைத்து அதை நோக்க வேண்டுமோ அதை நமக்குச் சாத்தியமாக்கி இருக்கிறார்.
Be the first to rate this book.