இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய நிறுவனரான டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்கள் மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதத் திட்டமிருந்தார். 1954-இல் எனக்கு அம்பேத்கர் அளித்த ஒரு நேர்முகத்தில் தனக்கு மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை பற்றி ஒரு நூல் எழுதும் நோக்கம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். இந்தியாவின் மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதி என்று ஜோதிராவை அவர் வர்ணித்தார். புத்தர், கபீரைப் போலவே ஜோதிராவையும் தன் தலைவராக அவர் மதித்து வந்தார். ஆனால் அம்பேத்கரின் உடல்நிலை மோசமானதால் இந்நூல் பணி நடந்தேறுமா என அவர் ஐயம் தெரிவித்தார். அவரால் இப்பணியைச் செய்ய இயலவில்லை என்றால் என்னால் செய்ய இயலும் என நான் அவரிடம் சொன்னேன்.
- தனஞ்செய் கீர்
Be the first to rate this book.