பூலோகத்திலே,மனிதனுடைய சரித்திரத்தில் மிகப் பெரிய விஷயமென்னவென்றால் அவனுடைய லெளகிக சித்திகளல்ல; வவன் கட்டிவைத்த, உடைத்து போட்ட ஏகாதிபத்தியங்களல்ல. சத்தியத்தையும் தர்மத்தையும் தேடிக்கொண்டு யுகத்திற்கு யுகம் அவனுடைய ஆத்மா வளர்ச்சியடைந்து வந்திருக்கிறதே அதுதான் மிகப்பெரிய விஷயம். இந்த ஆத்ம வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறவர்கள், மானிட சமுதாயத்தின் ஞான இதிகாசத்தில் நிரந்தர ஸ்தானம் பெற்றுவிடுகிறார்கள். காலதேவதையானவள் எவ்வளவு சுலபமாக மற்றவர்களை மறந்துவிடுகிறாளோ அதைப்போல வீரர்களையும், புறக்கணித்துவிடுகிறாள். ஆனால் மகான்கள் எப்போதும் காலதேவதையின் ஞாபகத்தில் ஸ்திரவாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். காந்தியடிகளின் பெருமை, அவர் நடத்திய தீரமான போராட்டங்களை காட்டிலும் அவருடைய பரிசுத்த வாழ்க்கையிலேதான் தங்கியிருக்கிறது.
Be the first to rate this book.