உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. கலைப்பட இயக்குநராக நாமறிந்த ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை.
1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய, ஃபெலுடா வீரசாகசக் கதைகள் வங்காளத்திலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இந்தக் கதைகளின் நாயகன் ஃபெலுடா, வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என அழைக்கப்படுபவர்.
முதல் முறையாக, சத்யஜித் ரேயின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன.
ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் ‘மகாராஜாவின் மோதிரம்’ இரண்டாவது புத்தகம். மகாராஜா ஒளரங்கசீப்புக்குச் சொந்தமான புராதனமான மோதிரம் அது. முந்நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த பளபளக்கும் அந்த மோதிரத்தைக் கைப்பற்ற கலைப் பொருள் சேகரிப்பாளர்கள் வட்டமடிக்கிறார்கள். ஒரு நாள் மோதிரம் காணாமல் போகிறது. திருடியது யார்? தபேஷுடன் லக்னோவுக்குச் சுற்றுலா வரும் ஃபெலுடா, துப்பறியத் தொடங்குகிறார். மோதிரம் கிடைக்காத திருடர்கள் மறைவாக அவரைப் பின்தொடர்கிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க அந்த மோதிரம் கிடைத்ததா? ஃபெலுடா துப்பறிவதில் வெற்றிபெற்றாரா?
Be the first to rate this book.