'சாரே ஜகான் சே அச்சா' எனத் தொடங்கும் இந்திய தேசியப் பாடலை எழுதிய இக்பாலின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறது இந்நூல். மகாகவி எனப் போற்றப்படும் இக்பாலின் கவிதைகள் பலவற்றை அப்படியே மொழிபெயர்த்துத் தந்துள்ளது சிறப்பு. இக்பால் கேம்பிரிட்ஜில் படித்தவர் என்பதும் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதும் பலருக்குப் புதிய செய்திகள் ஆகும். எல்லாச் சமயங்களையும் பொதுமைப்படுத்தி இக்பால் பாடிய கவிதை ஒன்று.
நான் கோவிலுக்கு மரியாதை செய்கிறேன்.
கஃபாவின் முன் அடி பணிகிறேன்.
என் மார்பில் பூணூல் உண்டு.
என் கையில் ஜெபமாலை மிளிர்கிறது.
என்று இந்து, இஸ்லாம், கிறித்துவம் ஆகிய மூன்று மத ஒருமையைப் பாடியுள்ளார்.
Be the first to rate this book.