வ.ரா. என்று அறியப்படும் வரதராஜ ஜயங்கார் ராமசாமி சுதந்திரப் போராட்ட வீரர். சமூக சீர்திருத்தவாதி. பத்திரிகையாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர், பாரதி பக்தர், வாழ்நாள் முழுதும் தமிழ் இலக்கிய வளர்ச்சி, மேம்பாடு என்பதற்காகப் பாடுபட்டவர். வ.ரா. 1933 - 34ஆம் ஆண்டுகளில் சுப்பிரமணிய பாரதியார் சரித்திரத்தை காந்தி இதழில் எழுதினார். அவர் ஒரு கவிஞர் என்று கல்கி உட்பட சிலர் சொல்லிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்கள். அதோடு இரவீந்திரநாத் தாகூர் அளவிற்கு மகாகவி இல்லை என்றார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாகவே பாரதியார் சரித்திரத்தை எழுதினார். இந்நூல் பாரதி வரலாற்றைக் குறித்து வெளிவந்த நூல்களில் முதன்மையானது.
Be the first to rate this book.