இந்த நூல் உங்களுக்கு ரசிக்கும்; ருசிக்கும்.உங்களையும் மகாபாரத காலத்திற்கு இந்தப் புத்தகம் அழைத்துச் செல்லும்.
மகாபாரதத்திலே காணப்படும் இதுவரைக் கேள்விப்பட்டிராத அந்தக் கதைகள் போதிக்கும் நீதி, அந்தக் கதைகள் சொல்லப்பட்டிருக்கும் நேர்த்தி, அவற்றினுள்ளே பொதிந்து கிடக்கும் ஆழ்ந்த பொருள், கதைகளின் மூலம் விளக்கப்பட்டிருக்கும் மாபெரும் தத்துவங்கள் என்று நீங்கள்
படித்து வியப்பதற்கு இந்தப் புத்தகத்தில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
எல்லோருக்கும் இந்த இதிகாசங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் சிலரைத் தவிர மற்றவர்களைத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதிலும் மகாபாரதக் கதையினுள்ளே சொல்லப்பட்டுள்ள உபகதைகளை அறிந்தவர்கள் மிகச் சொற்ப அளவிலேதான் இருப்பார்கள்.
வால்மீகி எழுதிய இராமாயணமும் சரி, வியாசர் எழுதிய பாரதமும் சரி இரண்டுமே இந்திய இதிகாசங்களின் இரு கண்கள். பாரதத்தின் ஆன்மீக மகுடத்தில் ஜொலிக்கும் இரண்டு வைரக்கற்கள் இவை. இரண்டுமே இருபெரும் போர்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. இந்தப் போரில் ஒன்று மங்கைக்காக நடந்த மாபெரும் போர். மற்றொன்று மண்ணுக்காக நிகழ்ந்த மகத்தான யுத்தம்.
Be the first to rate this book.