மகாபாரதத்தில் சொல்லப்படும் இந்த உபகதைகள் மிகவும் ஆழமானவை. அர்த்தம் பொதிந்தவை. நம் புராணச் சிறப்புக்கு என்றென்றும் சாட்சியாக நிற்பவை. மகாபாரதத்தில் வரும் பல்வேறு கிளைக் கதைகளில் சில இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கிளைக் கதைகளின் சிறப்பம்சம், இவை மகாபாரதத்தின் நெடுங்கதைக்கு இணையான சுவாரஸ்யம் கொண்டவை. அதேசமயம், பெரிய பெரிய தத்துவங்களை மிக எளிமையாக விளக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு கதைக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இக்கதைகள் மகாபாரதத்தில் எந்த இடத்தில் யாரால் ஏன் சொல்லப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டால், மகாபாரதத்தின் விரிவையும் ஆழத்தையும் நாம் புரிந்துகொள்ளமுடியும். இக்கதைகளை சுவாரஸ்யமாகவும் எளிமையாகவும் எழுதி இருக்கிறார் லதா குப்பா.
Be the first to rate this book.