மகாபலிபுரம் (அல்லது மாமல்லபுரம்), 7ஆவது, 8ஆவது நூற்றாண்டு வாக்கில், காஞ்சிபுரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இங்குள்ள கட்டடங்கள் அவற்றின் கட்டடக்கலைக்காகப் போற்றப்படுகின்றன. குடைவரை கோயில்கள் தொடங்கி தனித்த கற்சிற்பங்கள்வரை காணப்படுவது இதன் சிறப்பு. கடற்கரையை ஒட்டிய மகாபலிபுரச் சிற்பத் தொகுதி மணலில் புதைபட்டிருந்தது; 18ஆம் நூற்றாண்டில் இது தோண்டியெடுக்கப்பட்டது. 1984இல் இது உலகப் பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டது.
Be the first to rate this book.